×

அரை இறுதியில் ஜெசிகா: மயாமி ஓபன் டென்னிஸ் ஸ்வெரவை வீழ்த்தினார் கஸ்பர்

மயாமி: அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முன்னிணி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ், தர வரிசையில் தன்னை விட பின்தங்கி இருக்கும் நார்வே வீரர் கஸ்பரிடம் படுதோல்வி அடைந்து வெளியேறினார். மயாமியில் நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் காலிறுதியில் ஜெர்மனி வீரர்  ஸ்வெரவ்(4வது ரேங்க்), நார்வே வீரர் கஸ்பர் ரவ்வுத்(8வது ரேங்க்) ஆகியோர் மோதினர். முதல் செட்டை  6-3 என்ற புள்ளிகணக்கில் கஸ்பர் கைப்பற்றினார். அதனால் அதிரடியாக விளையாடிய ஸ்வெரவ்  2வது செட்டை 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்யும் 3வது செட்டில் ஸ்வெரவ் செய்த தவறுகளை தனக்கு சாதகமாக்கி புள்ளிகளை குவித்த கஸ்பர் அதையும் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் தனதாக்கினார்.

அதனால் ஒரு மணி 38 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் கஸ்பர் 2-1 என்ற செட்களில் ஸ்வெரவை முதல்முறையாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர்(11வது ரேங்க்), அர்ஜென்டீனா வீரர் பிரான்சிஸ்கோ செருன்டோலோ(103வது ரேங்க்) மோதினர். முதல் செட்டில் 1-4 என்று பின்தங்கி இருந்த போது, ஜானிக் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். அதனால் பிரான்சிஸ்கோ முதல்முறையாக முதல்நிலை போட்டி ஒன்றில் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

அரையிறுதியில் ஜெசிகா: மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது காலிறுதியில் போலாந்து வீராங்கனை இகா ஸ்வியடெக்(2வது ரேங்க்) ஒரு மணி 17 நிமிடங்களில் செக் குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிதோவையை(32வது ரேங்க்)  வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். கடைசி காலிறுதியில் ஸ்பெயின் வீராங்கனை பவுளா படோசா(6வது ரேங்க்) முதல் செட்டில் 1-4 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கி இருந்த போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். அதனால் அவரை எதிர்த்து விளையாடிய அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா(21வது) ரேங்க் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார். இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் ஸ்வியாடெக்-ஜெசிகா, பெலிண்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து)-நவோமி ஒசாகா(ஜப்பான்) ஆகியோர் விளையாட உள்ளனர்.

Tags : Jessica ,Kaspar ,Miami Open , Jessica in the semi-finals: Kaspar knocks down the Miami Open tennis square
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஜெஸிகா பெகுலா